Saturday, January 29, 2011

மாவீரன் ...முத்துக்குமார் .....

மாவீரன் ...முத்துக்குமார் .....


முத்துகுமார்  புகழை
போற்றி  வணங்குவார் பெரியார் -அவனை
மூடி மறைத்திட
முயற்சிகள் செய்வார் சிறியார்

அதனால் என்ன
கடல் அலையே !
அதோ காயும் நிலாவும்
அவன் தலையே !
1
தளர்ந்து கிடந்த தமிழின உணர்வை
தட்டி எழுப்பிட நெருப்பானான்
தமிழீழ  அழுகுரல் கேட்டு
தமிழன் துடித்து இழந்திட பொறுப்பானான்
விடுதலை புலிகளை முழுதாய் ஆதரிக்க
உயிர்கொடை விரும்பி அளித்தான்
உலகத்தின்  கவனம்  ஈழத்தில் திரும்ப
உறவுகள் துடிதுடிக்க தீக்குளித்தான் ...
2
மாவீரன் முத்துகுமார்
முது தமிழ் நாட்டின் கரும்புலி
விடுதலைபுலிகளுக்கு ஈடாக
வண்ண ஈழம் மலர விரும்பிய போராளி
துரோகிகளை தோலுரித்த
தன்னிகரில்லாத  நெருப்புக்காளி
தமித்தேசிய தலைவரையே
திடுக்கிட வைத்த அன்பு ஆளி.....
3
இந்திய சிங்கள ராணுவம் அழித்த
ஈழ தேசத்தை நினைத்து நொந்து அழுதான்
இனப்படுகொலைக்கு எதிராக
இன்னுயிர் ஆயுதம் ஏந்தி எழுந்தான்
தன்னினம் அழிவதை வேடிக்கை பார்க்கும்
தமிழர் தலைவர்களை காரி முழிந்தான்
துரோகிகள் புரிந்த ஈனச்செயல்களை
தன மரண சாசனத்தில் தீர மொழிந்தான்...


குறிப்பு ;29  சனவரி 2011 ..
மாவீரன் முத்துகுமார் நினைவு  கவிதை ..

No comments:

Post a Comment