Thursday, February 3, 2011

பொல்லாத சாதி -மூலி அலங்காரி ........

பொல்லாத சாதி -மூலி அலங்காரி ........

வா ..ன்னு  கூப்பிடலான்னா ...
வாயில ..எச்சி .

திண்ணையில  குந்த சொல்லலான்னா..
தின்ன ..காயல.

தண்ணி மொண்டு குடுக்கலான்னா ..
கேணியில ...தண்ணி மொள்ள கவுறு இல்ல .

கோழியடிச்சி கொழம்பு வைக்கலான்னா ..
குஞ்சி ...பிரியல .

ஏழு புள்ளைய கூட்டி வந்து
எதிர் ஊட்டு ஏறவானதில நிக்கிது ..
இந்த உறும நேரத்தில
இப்ப நான் இன்னா செய்யறது ...

அண்ணன் நல்லதம்பி கோட்டையில் ஆற ..
ஆறாத பசியோடு
அலைமோதி வந்த
அல்லி நல்லதங்காளை பார்த்து ..

அடங்கா பிடாரி
அண்ணி மூலி அலங்காரி
இப்படி சொன்னாளாம்
இலக்கியத்தில் ...

இது வெறும் நடவுப்பாட்டல்ல..கதையல்ல
இன்றும் நடக்கிறது அரசியலில் ..
அன்று  மூலி அலங்காரி சொன்னதை ..
இன்று மேல் சாதி தலைவர்கள்  சொல்கிறார்கள் ...
திருச்செந்தூரில் ..கூட்டணி பேச்சு வார்த்தைகளில்..
தலித் தலைவர்களிடம் ..வாய் நோவாது ...


.......தலையாரி
......03 பிப்ரவரி 2011

No comments:

Post a Comment